RECENT NEWS

'ஜெஜு ஏர்' விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்ததன் எதிரொலி நிறுவனத்திருக்கு பெரும் இழப்பு
தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநகர பேருந்துகளில் இடமில்லை... தானே மாநகராட்சி மேயர் திட்டவட்ட அறிவிப்பு!

தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநகர பேருந்துகளில் இடமில்லை... தானே மாநகராட்சி மேயர் திட்டவட்ட அறிவிப்பு!

Nov 14, 2021

2750

மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் தடுப்பூசி போடாதவர்கள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது என தானே மேயர் நரேஷ் மாஸ்கே அறிவித்து உள்ளார்.இதுதொடர்பாக பேசிய அவர், மாநகராட்சி பேருந்துகளில் பயணம் செய்ய தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது யுனிவர்சல் பாஸ் கட்டாயமாகும் என்றார். ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்கள் தானே மாநகராட்சி பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.அதுபோல குஜராத் மாநிலம் சூரத்திலும் 2-வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று சூரத் மாநகராட்சி ஆணையர் பஞ்சநிதி பானி அறிவித்துள்ளார்.

மாநகர மற்றும் நகரப்பேருந்துகளில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

மாநகர மற்றும் நகரப்பேருந்துகளில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

Jun 23, 2021

3714

இன்று முதல் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்படுகிறது.மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கியது போல், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இலவச பயண சலுகை வழங்கி அரசு உத்தரவிட்டிருந்தது.அதன்படி இன்று முதல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் ஒரு உதவியாளர், திருநங்கைகள் ஆகியோர் உரிய அடையாள அட்டை காண்பித்து பேருந்துகளில் இலவச பயண சீட்டு பெற்று பயணிக்கலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கு சிவப்பு நிறத்திலும், உதவியாளருக்கு நீல நிறத்திலும், திருநங்கைகளுக்கு பிங்க் நிறத்திலும் இலவச பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

சென்னையில் மாநகர பேருந்துகள் 6 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் :போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னையில் மாநகர பேருந்துகள் 6 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் :போக்குவரத்து கழகம் அறிவிப்பு

May 05, 2021

2584

சென்னையில் மாநகர பேருந்துகள் 6 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை அடுத்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே மக்கள் அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இதே போல மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்...

5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்...

Aug 31, 2020

2754

நாளை முதல் சென்னை மாவட்ட எல்லைக்குள் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.சென்னையில் உள்ள 39 பணி மனைகளில், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பேருந்துகளை தயார் செய்வதிலும் சுத்தம் செய்வதிலும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பேருந்துகளில் எஞ்சின்களை சோதித்து, குறைபாடுகள் இருந்தால் அவை சரிசெய்யப்பட்டு, பழுதுநீக்கி, கிருமிநாசினி தெளித்து பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடத்தப்படுகிறது.

BIG STORIES

விக்கிரவாண்டி லியா மரணத்தில் திருப்பம்..
வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்..
செப்டிக் டேங்க் விபத்து நாடகமா? சிறுமியை கையில் தூக்கிச்சென்ற பள்ளி ஊழியர்?
ரிப்பன், உடையில் ரத்தக்கறை இருந்தது எப்படி?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News